தென்றலின் ஆட்டோகிராப்
வருகை புரிந்த தென்றல்
மலரிதழ்களிலும் இலைகளிலும்
ஆட்டோகிராப் இட்டுச் சென்றது
தோட்டத்தில் வருகை புரிந்த
வசந்த் தென்றலே
நீ வசந்தனா இல்லை வசந்தியா
என்று கேட்டன மலர்களும் இலைகளும்
மலர்களுக்கு நான் காதல் வசந்தன்
இலைகளுக்கு நான் எழில் வசந்தி
உலகெங்கிலும் உள்ள காதலருக்கு
நான் மலர் அம்புகளை இலவசமாக வழங்கும்
ஆயுத சப்ளையர் என்று மெல்லச் சொல்லியது தென்றல் !