சங்கமம் ♥️

சங்கமம்♥️

உச்சு முகறும் போதே
அச்சு வெல்லம் திங்க ஆசைபட்டது.
கன்னத்தின் நடுவே
கவர்ந்திழுத்த செவ்விதழ்
சுவைக்கும் போதே
அடி கறும்பை சுவைக்க ஆசைபட்டது.
விழி நான்கும் திரைமூடி
மனத்திரையை திறக்க
பாலின கவர்ச்சி
காதலின் உச்சம் தொட்டது.
காற்று கூட புகா வண்ணம்
இடைவெளி குறைந்தது
பத்து வீண் மீன்கள் உதவியுடன்
ஈர் உயிர் ஓர் உயிராக ஆக
இதயம் இடமாறாமல்
மனம் இடமாறியது.
விரல்கள் தொடுவானத்தில்
வீணை வாசிக்க
புல்லரித்த பூங்கொடி
தொட்ட சினுங்கியாக மாற
சிலாகித்த வண்டு
தேன் கூட்டில் தஞ்சம்.
தற்காலிக
விட்டில் பூச்சுகள்
விளக்கேற்றி
திருவிழா கொண்டாடி
மகா சங்கமம்மானது.
இயற்கையின் இயல்பை
இன்றியிமையாக்கியது.
கலவையின் தாத்பரியத்தை
உணர்ந்த மனிதம் மனித சங்கிலியை
உருவாக்கியது
மரபணு மகோன்னதத்தை
தெரிந்து கொண்டது
புரிந்து கொண்டது.
- பாலு.

எழுதியவர் : பாலு (16-Feb-21, 8:46 pm)
சேர்த்தது : balu
பார்வை : 203

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே