ஒட்டுண்ணிகளாய்

(சுறா மீனின் வயிற்றின் அடிப்பகுதியில் ரிமோரா என்ற ஒட்டுண்ணி வாழும் .அவைகள் வெளிவந்தால் சுறா மீன் தின்று தன் பசியைப் போக்கிக் கொள்ளும்.ரிமோராவாழவேண்டுமானால் சுறா மீனின் வயிற்றுப்பகுதியில் ஒட்டியே இருக்க வேண்டும் .அதனடிப்படையில் இக்கவிதை)
---_______________________________________
கடல் உலகில்
கணக்கில்லா உயிரினங்கள் .
மடல் விரியும் மீன் முதல்
மலை தூக்கும் திமிங்கலம் வரை

கடலில் மட்டுமல்ல நாட்டிலும் தான் .
சுறா மீன்களின் ஒட்டுண்ணியாக ரிமோரா.
அது ஒட்டாமல் போனால் அரோகரா .

வல்லரசு நாடுகளின்
ஆதிக்க வயிற்றுக்குள்
குட்டி நாடுகள் ரிமோராவாக
இல்லாமல் போனால்
வல்லரசு சுறா மீன்கள்
வளைத்துப் போட்டு விடும் .

கடலின் தாதாக்கள் சுறா மீன்கள் .நாட்டின் தாதாக்கள் வல்லரசுகள் .வல்லரசுகளின் ஒட்டுண்ணியாய்வாழ்வதைவிட சுதந்திரமாய் சாவதே மேல்.

எழுதியவர் : சு.இராமஜோதி (17-Feb-21, 6:22 am)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 41

மேலே