நீ வண்ணக் காணொலி
பாட்டில் எழுதினால் நீதான் பல்லவி
பளிங்கில் வடித்தால் பல்லவன் செதுக்கா பைங்கிளி
ஏட்டில் எழுதினால் வள்ளுவன் தந்த மூன்றாம் பால்
பளிச்சென்ற சிரித்தால் நீயோ ஆவின் பால் !
நந்தவனத்தில் உலா வந்த சிந்துபைரவி
அந்திப் பொழுதின் அழகிய நிலவொளி
நயனங்கள் இரண்டிலும் நீநீல நைல்நதி
என்சிந்தை எல்லாம் நீவண்ணக் காணொலி !
தேன்சுமந்த இதழ்கள் தித்திக்கும் சுரப்பி
மான்விழிகள் இரண்டும் காதல் திரப்பி
வான்உலாவும் நிலாஉனக்கு சிநேகிதி
நான் எழுதும் கவிதை எல்லாம் நீ !