தாளிப்பனை பூக்குமே

ஆசிரியத்தாழிசை

தென்னை மரம் பனை மரம் பாக்கு மரம்
ஈச்சை மரம் பேரிச்சை மரம் தாளிப்பனை மரம்
நீண்டு வளர்ந்து நெருங்கிய மட்டை பல கொண்டதாய்

ஆண்மரம் பெண்மரம் என பனையில் வகைகள்
நுங்கான காய்கள் முதிர்ந்தால் வாசமான பழமாய்
கொட்டைகளை புதைத்தால் திறன்மிகு நீண்ட கிழங்கு

தென்னையின் காய்கள் முதிர்ந்தால் கொப்பரைக்காய்
உரலில் ஆட்டினால் எண்ணெய்க்கழிவே புண்ணாக்கு
கொப்பரையைப் புதைத்தால் அழகு .தென்னம்பிள்ளை

பாக்குக்கு இதுபோல் பல்நிலை இல்லையாயினும்
பக்குவப் படுத்தினால் பல்லாண்டுகள் வைக்கலாம்
மட்டையோ தற்போது தட்டுகளின் பல்வகையில்

ஈச்சை சுவையான சின்னபழம் கொட்டை இரு பிளவில்
பேரிச்சை அளவில் பெரியதாய் சுவையோ அற்புதமாய்
மட்டையில் முற்கள் மரமேற படிப்படியாய் வழிகள்

தாளிப்பனை பூக்குமே நாற்பது ஆண்டுகளிலிருந்து
காய்களோ பழுக்காது முதிர்ந்தால் வெடிக்குமே
இவ்வோலைகளே உகந்தது எழுதுவதற்கு அழகாய்
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (22-Feb-21, 7:58 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 52

மேலே