காதலிப்போர்களுக்கு
வருங்காலங்களில் மூச்சுவிடக்கூட வரிக்கட்ட வரலாம்
தாம்பத்தியத்திற்கென்று தனியாய் வரியும் வரலாம்
வியர்வை சுரந்தாலும் ஆரோக்கிய வரி போடப்படும்
காதலிப்போர்களுக்கு களிப்பூட்டும் வரி போடப்படும்
தெருவில் நடப்போர்களுக்கு நடமாடும் வரி வரலாம்
ஒரு பிள்ளைக்கு மேலுள்ளோருக்கு இடர்பாடு வரியும்
அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு இம்சை வரியும்
அதிகம் நீர் பருகுவோருக்கு அளவில்லா நீர் வரியும்
வீட்டில் உள்ளத்தோட்டத்திற்கு அதிக மகசூல் வரியும்
பாட்டி வைத்தியம் செய்தால் பாதுகாப்பு வரியும்
குழந்தைக்கு அதிகமாய் முத்தமிட்டால் முத்த வரியும்
மரத்தின் நிழலில் ஒதுங்கினால் குளு குளு வரியும்
ஓசையோடு குசுவிட்டால் இரைச்சல் வரி எனவும்
எவ்வகை வரியும் வரலாம் எல்லாம் அரசு இயங்கவே
என்றாலும் யாவரும் ஒத்துழைப்போம் நாடு உய்யவே
----- நன்னாடன்.