மக்கள் விதைகள்
பதவியில் அமர
பணத்தை வாரி இறைத்து
பணிவுடன் பாதை தேடி
பவனி வந்தது அன்று
உதவி செய்வேன் என்று
உறுதி மொழிகொடுத்து
இனி ஏழ்மை இல்லையென்று
ஏழை நெஞ்சில் இடம் பிடித்து
ஓட்டு எண்ணிக்கை பெற்று
முடிவுகாணும் நாளன்று
இறுதி ஆண்டு தேர்வு எழுதிய மாணவனாய்
மனம் நிலை கொள்ளாமல் தவித்து
தள்ளாடியது அன்று
தேர்வில் வென்று
மகிழ்வு கொண்டு
மக்கள் தேவை மறப்பது இன்று
விதை விதைத்தால்
அறுவடை காணலாம் மீண்டும்
அறுவடை காண மக்கள் விதையே அவசியம்.