நகைச்சுவைத்துணுக்குகள் 33

“நம்நாட்டிலுள்ள மிகவும் தேசபக்தியுள்ள மனிதர்களைப்பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார் அந்த நாட்டின்பிரசிடெண்ட்..
“என் மக்கள் நான் எதைக்கேட்டாலும் கொடுப்பார்கள்” என்றார்.
அவர் பக்கத்திலிருந்த கவரனருக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் பிரசிடெண்டுக்கு முன் பேச முடியுமா?
அப்போது அங்கே போய்க்கொண்டிருந்த ஒருவனைக் கூப்பிட்டு, “நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? “ என்று கேட்டார் பிரசிடெண்ட்.
“நான் ஒரு விவசாயி” என்றார் அவர்
“நல்லது உன்னிடம் 2 வீடுகள் இருந்தால், ஒரு வீட்டை அரசாங்கத்துக்குத்தருவாயா?” இது பிரசிடெண்ட,
“ ஆம். கொடுத்துடுவேன்” என்றார் அந்த விவசாயி
“பார்த்தீர்களா?” என்று தன் கூட இருந்த கவர்னரைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்.
ஆனால் கவர்னர் இதை நம்பத்தயாராக இல்லை.
“ 2 கார்கள் உங்களிடம் இருந்தால், அரசாங்கத்துக்கு ஒரு காரைக் கொடுப்பீர்களா?” பிரசிடெண்ட் கேட்டார்
“கொடுப்பேன்” என்றார் விவசாயி.
“பார்த்தீர்களா?” என்று கவர்னரைப்பார்த்து பிரசிடென்ட் சிரித்தார்.
‘சரி, நீங்கள் அவனிடம் ஏதாவது கேளுங்கள்” என்றார் பிரசிடென்ட் கவர்னரைப்பார்த்து.
“உங்களிடம் 2 மாடுகள் இருக்கின்றன. அதில் ஒன்றை அரசாங்கத்துக்குக் கொடுப்பீர்களா?” என்று கேட்டார் கவர்னர்
“ஊஹூம் மாட்டேன்” என்றார் அந்த விவசாயி
“ஏன்?” என்று கேட்டார் கவர்னர்
“ஏனென்றால் என்னிடம் 2 மாடுகள் இருக்கின்றன” என்றார் அந்த விவசாயி
**************
*என்னப்பா ராமு. நீ கோபாலைப்பாத்து பரீட்சையிலே காப்பி அடிச்சிருக்கே?
இல்லே, சார்
பொய் சொல்லாதே. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி யாருங்கற கேள்விக்கு ஜவஹர்லால் நேருன்னு ரெண்டு பேரும் எழுதி இருக்கீங்க.
அது கரெக்ட்தானே. அதை வெச்சி, நான் காப்பி அடிச்சதா எப்படி சொல்றீங்க?
நம்நாட்டின் தேசத்தந்தை என்று நாம்யாரை சொல்கிறோங்கிற கேள்விக்கு மகாத்மா காந்தின்னு ரெண்டு பேரும் எழுதி இருக்கீங்க
அதுவும் கரெக்ட்தானே. அதை வெச்சி, நான் காப்பி அடிச்சதா எப்படி நீங்க சொல்லலாம்?
டாக்டர் ராதா கிருஷ்ணனின் பிறந்த நாள்எதுங்கிற கேள்விக்கு, கோபால் என்க்குத்தெரியாதுன்னு எழுதி இருக்கான். நீ “ எனக்கும் தெரியாது” ன்னு எழுதி இருக்கியே. என்ன அர்த்தம்?
***************
அவன் ஒரு விளக்கைத்தேய்த்து பாலிஷ் போட்டுக்கொண்டு இருந்த போது அவன் முன்னால் ஒரு ஜீனி தோன்றுகிறது.
“ சார், உங்கள் 3 ஆசைகளைச்சொல்லுங்கள்” என்கிறது.
அவன் “எனக்கு குளிர்ச்சியான கோக் ஒன்று வேண்டும்” என்று கேட்கிறான், அவனுக்கு உடனே கிடைக்கிறது. அவன் அதைக்குடிக்கிறான். “அடித்தது என்ன?” என்று ஜீனி கேட்க “அவன்மிகவும் அழகான பெண்ணுடன் ஒரு தீவில் நான, உல்லாசமாக இருக்க வேண்டும்” என்று கேட்டான். உடனே அவனும் ஒரு அழகான் தீவில் மிகுந்த அழகுடைய பெண்ணுடன் இருக்கிறான்.
“சரி உங்கள் அடுத்த ஆசை என்ன?” என்று கேட்டது ஜீனி.
“நான் இனிமேல் வேலை செய்யத்தேவை இருக்கக்கூடாது” என்றான்.
. அடுத்த நிமிடம் அவன் தன் பழைய கவர்மெண்ட் ஆபீசில் இருந்தான்.
*****************
மாஜி மந்திரி ஒருவர் ஊருக்கு வெளியில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறார். அப்போது அவர் முன் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் தோன்றி
“உன்னுடைய பணம் அத்தனையையும் எடுத்து மரியாதையாக என்னிடம் கொடுத்து விடு”. என்று மிரட்டுகிறான்.
அந்த மாஜி மந்திரி “என்னை யாரென்று நினைத்துக் கொண்டு இருக்கிறாய்?. நான் முன்னாள் மந்திரி” என்றார்.
“அப்படியானால் என்னுடைய எல்லாப் பணத்தையும் மரியாதையாகக் கொடுத்துவிடு” என்றான் அவன்
**************
அந்த வயதானவர் தன் 100வது வயதைக் கொண்டாடிக்கொண்டு இருந்தார். பலரும் அவரைப் பாராட்டினார்கள். ஒருவர், “அவருடைய வயதுக்கும் அவரின் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்” என்று கேட்டார்.
அப்போது அவர் சொன்னார்:
“75 ஆண்டுகளுக்கும் மேலாக நான் தினமும் வெட்ட வெளியில் வாக்கிங் செய்கிறேன்” என்றார். “ மேலும் வாக்கிங், எனக்கு நல்ல ஆரோக்கியத்தை அளித்தது. நான் கல்யாணம் செய்து கொண்டு சுமார் 75 ஆண்டுகள் முடிந்து விட்டன.
கல்யாணத்தின்போது நானும் என் மனைவியைம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதன்படி எங்களுக்குள் சண்டை வந்தால், தவறு செய்தவர்கள் வீட்டுக்கு வெளியே போய் 3 மணி நேரம் வாக் செய்யவேண்டும் என்று. அதன்படி கடந்த 75 வருஷங்களாக நானும் தினமும் தவறாமல் வெளியில் நடந்து கொண்டு வருகிறேன்” என்றார்

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (23-Feb-21, 4:32 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 78

மேலே