நகைச்சுவை துணுக்குகள் 34

அந்த வயதானவர் தன் 100வது வயதைக் கொண்டாடிக்கொண்டு இருந்தார். பலரும் அவரைப் பாராட்டினார்கள். ஒருவர், “அவருடைய வயதுக்கும் அவரின் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்” என்று கேட்டார்.
அப்போது அவர் சொன்னார்:
“75 ஆண்டுகளுக்கும் மேலாக நான் தினமும் வெட்ட வெளியில் வாக்கிங் செய்கிறேன்” என்றார். “ மேலும் வாக்கிங், எனக்கு நல்ல ஆரோக்கியத்தை அளித்தது. நான் கல்யாணம் செய்து கொண்டு சுமார் 75 ஆண்டுகள் முடிந்து விட்டன.
கல்யாணத்தின்போது நானும் என் மனைவியைம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதன்படி எங்களுக்குள் சண்டை வந்தால், தவறு செய்தவர்கள் வீட்டுக்கு வெளியே போய் 3 மணி நேரம் வாக் செய்யவேண்டும் என்று. அதன்படி கடந்த 75 வருஷங்களாக நானும் தினமும் தவறாமல் வெளியில் நடந்து கொண்டு வருகிறேன்” என்றார்
************
*ஒருவர் மருந்துக்கடைக்குச்சென்று “விக்கலுக்கு மருந்து வேண்டும்” என்று கேட்டார். கேட்டவுடனே மருந்துக்கடைக்காரர் அவர் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார்.

மருந்து வாங்க வந்தவர் திகைத்துப் போய்” ஏன் என்னை அடித்தீர்கள்? என்று கேட்டார்

“பார்த்தீர்களா உங்கள் விக்கல் நின்று போய்விட்டது” என்றார் கடைக்காரர்.

“விக்கல் எனக்கு இல்லை. அங்கே காரில் உக்காந்திருக்கும் என் பெண்டாட்டிக்கு” என்று கூறியபடி பரிதாபமாக தன் கன்னத்தைத் தடவிக்கொண்டிருந்தார் கடைக்காரர் கொடுத்த மருந்தை வாங்கிக் கொண்டு. கடைக்காரர் தனக்குக்கன்னத்தில் கொடுத்த மருந்தையே தானும் தன் மனைவிக்கு கொடுத்திருக்கலாமோ என்று எண்ணியவாரு..
அப்படி செய்தால் விக்கல் தன் வாழ்க்கையில் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடுமோ என்று அவ்வாறு செய்யத்துணியவில்லை.
*******************
*பையன்1,2,3 பத்து வரையிலும் சரியா சொல்லிண்டு வந்தான். 10க்கு அப்புறம் J.Q,K அப்படிங்கறான்
அவனோட அப்பாவோட சீட்டாட்ட ரத்தம் அவன் உடம்புலேயும் ஓடுது . அதான்
******************
ஒரு திருடனும் ஒரு அரசியல் வாதியும் ஒரு நாள் சாக்கலேட் விற்கும் கடைக்குள் நுழைந்தார்கள். எல்லாரும் தங்கள் வேலையில் பிஸியாக இருந்த போது அந்தத்திருடன் 3 சாக்கலேட் பார்களைத் திருடி தன் பையில் போட்டுக் கொண்டான்.
பிறகு அவ்விருவரும் கடைக்கு வெளியே வந்தவுடன் திருடன் தன் நண்பன் அரசியல் வாதியிடம் சொன்னான்

“ பிரதர், 3 சாக்கலேட் பார்களை நான் இந்தக்கடையிலிருந்து யாருக்கும் தெரியாமல் திருடிட்டேன். உன்னால் அந்த மாதிரி சாமர்த்தியமா செய்யமுடியுமா?

அ.வாதி: இதென்ன பிரமாதம். ? இதைவிட பிரமாதமா என்னால் செய்ய முடியும்.”

திருடன்: செஞ்சு காட்டு பார்ப்போம்

அ.வாதி: வா, கடைக்குள்ளே போவோம்

இருவரும் கடைக்குள் போகிறார்கள்
அ. வாதி: ( கடைக்காரரிடம்) நான் ஒரு மாஜிக் செய்கிளேன். நீ பார்க்கிறாயா?

கடைக்காரர் : ( வியப்புடன்) நிச்சயமாக.

அ. வாதி: சாக்லேட் பார் ஒண்ணு எனக்குக்கொடு

கடைக்காரர் கொடுத்தார். அதை அரசியல்வாதி சாப்பிட்டார்

அ.வாதி: இன்னொரு சாக்லேட் பார எனக்குக்கொடுப்பா.

கடைக்காரர் கொடுக்கிறார். அதையும் அரசியல்வாதி சாப்பிட்டு விடுகிறார்

அ. வாதி: இன்னொரு சாக்லேட் பார் எனக்குக்கொடுப்பா.

கடைக்காரர்: ஏற்கனவே ரெண்டு கொடுத்துட்டேன். இன்னும் அதுக்கே நீ துட்டு தரல்லே

அ. வாதி: கவலைப்படாதே. நான் உன்னை ஏமாத்த மாட்டேன். மாஜிக், மாஜிக்,

கடைக்காரர் இன்னொன்று கொடுக்கிறார். அதையும் அரசியல்வாதி சாப்பிட்டு விடுகிறார்.

அ. வாதி: இப்ப நீ 3 சாக்லேட் பார்தானே கொடுத்தே. அதை நான் சாப்பிட்டதை நீ பார்த்த இல்லியா?

கடைக்காரர்: ஆமாம். ஆனா எங்கே நீ சொன்ன மாஜிக்?

அ, வாதி: இப்பாரு, ( தன் அருகிலிருந்த திருடனைக்காட்டி) இவர் பையிலே அந்த 3 சாக்கலேட் பாரும் இருக்கும். அவருடைய பையை வேணா செக் பண்ணி பாரு என்றார்
என்ன இருந்தாலும் அரசியல்வாதிகள்தான் கில்லாடிகள். என்ன சொல்றீங்க?
****************

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (24-Feb-21, 3:45 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 51

மேலே