உன் நினைவில் நான்

மங்கையே ...
உன்னை கண்டவுடன்
மது கிண்ணத்தை
ஒதுக்கியது என் மனம்..!!

உன் அழகினில் மயங்கி
செல்லும் திசை அறியாத
படகினைப் போல்
தத்தளித்து தவிக்குது
என் மனம் ..!!

மது உண்டவன்
போதை தெளிந்தால்
தன் நிலைக்கு
வந்து விடுவான் ...!!

பேதையே
உன்னை நினைத்து
மயங்கிய நான்
தெளிவு பெறுவது
உன் முடிவில்தான்
இருக்கிறது ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Feb-21, 9:12 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : un ninaivil naan
பார்வை : 477

மேலே