சேட்டை
குழலை விட இனிய என் பிள்ளையின் மொழி
ஊடுறுவியது
என் சொற்களின் ஏட்டுக்குள்
ஏதோ உலகில் தொலைதிருந்த என்னை
மீட்டெடுக்கிறது
என் பிள்ளை
அம்....அ,,,அம்மா!!
என கொஞ்சுகையில்
வாரி எடுத்து
அணைத்துக் கொண்டேன்
முத்தமிட
எச்சில் பட்டதாலோ என்னவோ
ஒரு சினுங்கல்
இறக்கிவிட்டதும்
தவழ்ந்தே நகர்ந்து
சிறு தூரம் சென்றதும்
கழுத்தைத் திருப்பி
புன் சிரிப்புக் காட்டி
அம்மா என்றது
பிடிக்க ஓடுகையில்
தவழுதலில் அவள் வேகம் காட்ட
நடித்தேன்
என்னால் முடியாதது போல்!!