முடிந்தவரை
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லியும் முடிக்கிறேன்
உன் கண்கள் பார்த்து
என் காதலை
அதை ஏற்றதால்
உன் விரல்களுக்கு
என் அன்பு முத்தங்கள்
பதிலுக்கு படுத்துகிறாய்
உன் கால் கொலுசின் ஒலிக்கு
என் தாளம் நீ இசைத்து
நான் பாடும் பாட்டுக்கு
நீ இசை அமைக்கிறாய்
இது என்ன
உன் விஷம விளையாட்டு
என்னை உன் விளையட்டுப் பொருளாக்கிவிடுகிறாய்
ஏன் இப்படி ஒரு ஆட்டம்
மூச்சு வாங்குவது எனக்கல்லவா
உன்னை விடவும் முடியவில்லை
விட்டாலும் இருக்க முடியவில்லை
முடிவில்லாத முதல் நீயோ.....