அழகிய காதலை துளியளவு

வள்ளுவனே வந்து இன்றைய நிலைக் குறித்து
வகை வகையாய் பல குறள்கள் எழுதினாலும்
காதல் வர்ணனை கவிதைகளைத் தவிர எதையும்
தமிழ் கற்றோர் யாரும் விரும்புவதில்லை உணர்வீர்
காதலும் காமமும் சிறு ஊறுகாய் தான் அதனை
உணவளவிற்கு ஒரு போதும் உண்ண முடியாதே
உற்சாகம் மிகுந்து நாமும் உண்ணத் துணிந்துவிட்டால்
உபாதைகள் வந்து உடல் நலிவுறும் அறிவீரோ
மனக்காதல் தவிர்த்து தெளிந்தோராலேயே
மகத்தான காவியங்கள் உருவானதை தேடி அறிவீர்
வலிமையுடல் வேண்டின் நல்ல உணவு உட்கொண்டு
திடமாய் உழைத்து திரவியங்கள் ஈட்டுதலைப் போல்
அழகு காவியங்கள் எழுத அழகிய காதலை துளியளவு
புகுத்தினாலே நிலைக்கும் புகழ் கிடைக்கும் முயல்வீர்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Feb-21, 7:06 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 86

மேலே