காதல் சுரம்ஒன்றையும் அழகுப் பல்லவியே ஏனடி சேர்த் தாய்
பல்லவி நீபாடும் பாட்டில் பவளயிதழினில்
சொல்லெலாம் தேன்சுமந்து இனிமையில் நடக்குதடி
பல்வரிசை புன்னகையில் நீபாடிடும் பொழுதினில்
பல்லவியில் காதல்சுரத்தையும் சேர்த்தது ஏனடி ?
-----இப்பாவில் பல்லவி கலிவிருத்தம் எனும் யாப்பெழுலினில்
அழகு செய்கிறாள்
வெண்பாவில் எப்படி தரிசனம் தருகிறாள் என்று பார்ப்போம் .
பல்லவிநீ பாடிடும் பாட்டினில் செவ்விதழில்
சொல்லெலாம் தேன்சுமந்து பூப்போல் நடக்குதடி
சொல்லினில் காதல் சுரம்ஒன்றை யும்அழகுப்
பல்லவியே ஏனடிசேர்த் தாய் ?