அழகுமிகு சிலையே மலரே

அழகுமிகு சிலை செய்தே அதற்கு
பெண் என உடலோடு உயிர் தந்து
மண்ணில் பிறக்க வைத்து உலவ விட்டு
மயக்கும் கருநீலவிழி கொடுத்து
பார்க்குமாறு என்னருகில் வரவழைத்து
பரவச நிலையில் என் மனம் பதைபதைக்க
பாதை முழுதும் வெண்மேகம் ஊர்வதைப்போல்
பறந்தவாறு இரு தேவதைகள் பூத்தெளிக்க
புன்னகைப் பூத்தாள் அந்த அழகுச் சிலை
பொங்குத் தமிழ் என்னுள் பீறிட்டு பொழிய
சங்க புலவர்களும் சொல்லாத தமிழ்ச்சொல்லால்
பொன்னழகி மின்னல் கொடியாளுக்கு
புனைத்தேன் விண்னுயர்ந்த தமிழால் ஒரு கவிதை
பளீரென ஒளிரும் பொன்னிறத்து தளிரே
மலர்வனத்தில் நீயே சிறந்து வளர்ந்த மலரடி
தழுவியணைத்து எனதாக்க முயல்கிறேன்
தடையேதும் சொல்லாமல் கைகளுள் வாயேன்டி.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Mar-21, 9:47 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 234

மேலே