அவள் கூந்தலின் அழகு

ஆகாயத்தை கொஞ்சம் அன்னாந்து பார்த்தேன்
ஆகா அங்கோர் கார்மேகத் துண்டு...
குழல் குழலாய் குவிந்தும் விரிந்தும் ..
ஆற்றங் கரையில் இருந்த நான்
அங்கே அப்பெண்ணைக் கண்டேன் அழகியவள்
நதியில் குளித்துவிட்டு தன கூந்தலை
கோதி அடக்கப் பார்க்க கட்டுக்
கூந்தல் அது காற்றில் அசைந்தாடி
நான் விண்ணில் கண்ட அம்மேகத்
துகள் போல குழல்குழலாய் அலையலையாய்
தவழ்ந்து அவள் தோளில் அடைக்கலமானதே
பெண்ணின் கூந்தலுக்கு இப்படியோர் அழகா
பார்த்து பார்த்து மகிந்தன் என்கண்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Mar-21, 9:40 am)
பார்வை : 80

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே