காதலன் கணவனான்

என் ஏடைகள் அனைத்தும் நிறைவேறிய நாள் அது
நான் கடந்த தறுகண் அனைத்திற்கும் பலன் கண்ட நாள் அது
எண்ண இயலா முறை நாம் பார்த்திருந்தாலும் கூட
என் தமக்கை ஆரத்தி சுற்றி வரவேற்கும் உன்னை
சாளரத்தின் சிறு தூம்பில் கண்டு நான் வெட்கம் கொண்ட நாள்
மூதுவர் ஆசி வழங்க உறவுகள் கூடி நிற்க்க
மணமகளாய் கடியறையில் உன்னருகே நான் நிற்கும் நாள்
மங்கள மேலம் முழங்க செல்வியான நான் திருமதியான நாள்
உன் விரல் சூடிய மனாலம் என் சென்னி நிறைத்த நாள்
ஞெகிழம் கற்ற ஆடவன் போல் ஆணமான உன்னையும்
வெட்கம் ஆட்கொண்ட நாள்
ஆல் நிறைந்த குழிசியில் இடப்பட்ட மோதிரத்தை
கைகோர்த்து தேடிய நாள்
நம்மிடையே இருந்த கோபம் அகங்காரம் போழ்வு
அனைத்தும் சழக்காகி காதல் வென்ற நாள்
இன்று முதல் உன் தோல்
என் சாம்பானதே
உன் மனைவியானதால் நானும்
வேரல் போல நற்பேறு கொண்டவளானேன்

எழுதியவர் : தீபிகா. சி (3-Mar-21, 11:57 am)
சேர்த்தது : தீபிகா சி
பார்வை : 85

மேலே