கரும்புள்ளியில் எதிர்காலம்

புள்ளியை சரியாக வைத்து
கோலம் போடாவிட்டால் ...
அது அலங்கோலமாக
காட்சியளிக்கும் ...!!

அதுபோல்தான்
தேர்தல் சமயத்தில்
நம் விரலில் வைக்கும்
கரும்புள்ளியை ...!!

சரியான
தொடக்கப்புள்ளியாக
அமைத்துக்
கொள்ளாவிட்டால் ...!!

நம் எல்லோரின்
எதிர்காலமும்
கேள்விக்குறியாக மாறி

முடிவில்லாத
துயரத்திற்கு
முற்றுப்புள்ளியாக
மாறிவிடும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (5-Mar-21, 1:40 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 501

மேலே