படார் பாசம்

எங்கள் மாவட்டத்தில் தொழிற்சாலை இல்லையாம்
முன்பு மாநிலம் ஆண்டவர்களின் அங்கலாய்ப்பு
ஐந்தாண்டு இடைவெளியில் எந்த கருத்துமில்லை
அதிசயமாய் 2021 க்கான தேர்தலில் எம்மீது கரிசனம்
உச்சமாய் நல்லது செய்ய காத்திருப்பதாய் கூவல்
இதுவரை ஆட்சி செய்ததில் எந்த நன்மையும் இல்லை
நல்லவை செய்யாமல் நல்லவர்களாகவே இரு கட்சியும்
கூறிட செயல்களின்றி ஐந்தாண்டின் ஆட்சி முடிவில்
ஒரு மாதங்கள் புரண்டேனும் ஆட்சியைப் பற்றிடணும்
ஒவ்வொரு நாளும் இளவரனாய் வலம்வரலாம்
வென்ற தொகுதி வேற்று நாட்டுக்கு சென்றதாகவும்
கேள்வி கேட்போர் மூட்டைப்பூச்சி போலவும் தெரிவர்
தச்சனைக் கூப்பிட்டு ஆப்பு செய்த குரங்காய் நாமும்
ஒரு வாக்கில் மாறுவதில்லை என எண்ண வேண்டாம்
பெரிய உடலை துளி நஞ்சே கொல்லும் மாற்றுவோம்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Mar-21, 10:35 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : padaar paasam
பார்வை : 52

மேலே