இந்த ஓட்டை

தங்கமகளுன்
தூய்மையாம்
தாய்மையையும்
புனிதமாம்
பெண்மையையும்
பெருமலையெனவே
புகழ்ந்து பாடி வந்தேன்.
கல்யாணத்திற்குமுன்னமே
கலைத்து வந்து நின்றாய்.
கவலையின் கசிவுகூட உனில்
கடுகளவும் காணவில்லை.
கலங்கிக்கசிந்தது - என்
கண்கள் மட்டும்தானா?
காணாமல் மரித்தது
காலத்தின் துடிப்பும்தானே... என்
இதயமே உடைந்ததால் பிறந்த
இதயமேயில்லா...
இதமேயில்லா...
இனம்காட்ட மறுக்கும்...
இந்த ஓட்டை
தந்தை-மகளென்ற
தலைமுறை-இடைவெளியில்
தொற்றிக்கொண்ட சிறு
துகள்மட்டும்தானோ? இல்லை
தவறுசெய்தும்
துளியேனும்
துயருணர்வேயில்லா
மாறி மருவி மடியும்
மானுட மகிமையின்
மரணமணியும்தானோ...???

எழுதியவர் : அமல்.சி.தேவ் (5-Mar-21, 4:44 pm)
சேர்த்தது : Christuraj Alex
Tanglish : intha otaai
பார்வை : 68

மேலே