நாளெனும் விருந்தினன்

நாளெனும் விருந்தினன்
நாளையும் வந்திடுவான்;
சாவெனுங்குகையில் - நான்
சுகநிர்வாணமடைந்திடின்
சைவப்புலியாய் - என்
சவம்தாண்டி சென்றிடுவான்;
துக்கத்திரைதான் - எனை
தூக்கமாய் மறைத்திருப்பின்
உதயத்தை அழைப்பிதழாய் - என்
உள்ளே அனுப்பிடுவான்;
இதயக்கண்களை - பூ
இதழ்போல் திறந்திடுவான்;
நூல்போன்ற நினைவுகளில் - புது
நம்பிக்கையெனும் பட்டம் விடுவான்;
தோல்வியின் தலையில் துல்லிய
துன்ப நரைகளையும் பிறப்பிப்பான்;
விருந்தினனாய் நானுமவனுடன்
விழைந்துச்செல்ல ஆசிப்பான்.

எழுதியவர் : அமல்.சி.தேவ் (5-Mar-21, 8:05 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 33

மேலே