சர்வ வல்லமை படைத்தவள் 🙏🏽

சர்வ வல்லமை படைத்தவள் 🙏🏽

மென்மையானவள்
மேன்மையானவள்
ஆண் மரம் என்றால்
பெண் நாணல் போல் வளைந்து கொடுப்பவள்.
சீறி வரும் புயல் காற்றில் பலத்த மரம் அது சாய்ந்துவிடும்
நாணல் அது சாயும் பின் எழுந்து நிற்கும்.

குடும்பம் என்ற நிறுவனத்தை காலகாலமாக சாமர்த்தியமாக நகர்த்தி செல்வதால் தான் ஆண்கள் தன் நிறுவனங்களை வெற்றியுடன் நடத்த முடிகிறது.
அகிம்சையை தன் வாழ் முழுவதும் மகாத்மா கடைபிடித்ததின் ரகசியம்
கஸ்தூரிபாய் என்ற ஆத்ம பலம் பொருந்திய பெண்ணால் தான்.
கருவறையில் இருப்பது கடவுள்.
அந்த கருவறையே தன்னுள் வைத்து இருப்பவள் பெண்.
ஒரு குழந்தை ஈன்றாளே அவள் சாமி.
பல குழந்தைகளை கருனையுடன் காத்த அன்னை தெரேசா உலகம் போற்றும் குலசாமி.
பிரச்சனை ஆணுக்கு வந்தால்
அது அவனோட சரி.
ஆனால் அதே பிரச்சனை பெண்ணுக்கு வந்தால்,
அது அவளோட மட்டும் முடிந்து விடுமா!
அவள் முதுகில் சுமக்கும்
குடும்பத்தையும் அது தாக்கும்.
ஆனானபட்ட அரசன் என்றாலும் அவன் அடிப்படை குணம் அறிந்தவள் அவன் மனைவி தானே.
எங்கோ பிறக்கும் ஆறு
எங்கெங்கோ ஓடி நன்மை செய்து கடைசியில் கடலில் கலக்கிறது.
நதியை போல் பெண்ணும் பிறப்பது ஒரு இடம் வாழ்வது ஒரு இடம் 
தன் குடுபத்திற்காக வாழ்க்கையில் பல விலை கொடுத்து
பல தியாகங்களை செய்து அவள் என்றும் மானுட பிறவியில் மகோன்னதனமான இடத்தில்
நின்று கொண்டு
சர்வ வல்லமையுடன்
சக்தியாக விஸ்வரூபமாய் காட்சியளிக்கிறாள்.

- பாலு.

எழுதியவர் : பாலு (7-Mar-21, 3:34 pm)
சேர்த்தது : balu
பார்வை : 54

மேலே