ஆட்டுப்பட்டி போல்

ஆட்டுப்பட்டி போல் கல்வி நிறுவன சிற்றூந்துப்பட்டி
ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலை கல்லூரி வரை
படிக்க அழைக்கும் வாகனமாயின்றி பகட்டுக்கே
பல வகையில் பல்வேறு தடங்களுக்கும் வியாபாரமாய்
குறிவைத்து யாவரையும் அழைக்க குளிரூந்துகள்
பலவகையில் பணத்திற்கு உகந்த தங்குமிடங்கள்
உணவுக்காக பெரியத் தொகை மாதந்தோறுமே
எல்லா மாணவர்களுக்கும் ஒரே கல்வித்தொகை
தேர்வதிலே எல்லோருமே வெவ்வேறு வகையாய்
ஆண்டுதோறும் அழகழகாய் கட்டடங்கள் முளைக்கும்
ஆனாலும் ஆற்றல்மிகு சமுதாயத்தை ஆக்குவதற்கு
அரசாங்க பள்ளியின் ஈடுபாடு இவர்களிடமில்லை
முப்பது வருட தனியார் நிறுவனங்களின் பயிற்சியால்
நூற்றுக்கு ஒருவர் கூட சிறந்த வல்லுனராய் இல்லை
எனில் யாரும் விரும்பும் தனியார் கல்விச் சாலைகள்
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (9-Mar-21, 9:29 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 87

மேலே