யுக-போதையோ

நாகங்களாகி
நப்பாசைகள்
நயனங்களிலே
நடனமாடுகின்றனவே...

மானுடங்களின்
மனக்குடங்களில்
பொறாமை-விஷங்கள்
பொங்கிவழிகின்றனவே...

பல்லிகளின்
பல்லிடுக்குகளில்
விட்டில்கள்
வீழ்ந்துமடிகின்றனவே...

அநீதி இருட்டுகள்
அமாவாசைகளாய்
ஆன்மப் பவுர்ணமிகளையே
அணைத்து விழுங்குகின்றனவே...

கருணைமலர்களின்
கருவறைகளில்
பகைமைப்பாறைகள்
பிறவியெடுக்கின்றனவே...

மணக்கோலங்களின்
மங்களகீதங்களில்
மரண ராகங்கள்
மறைந்தொலிக்கின்றனவே...!!!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (9-Mar-21, 11:30 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 36

மேலே