செயலின் வரைவுதான் நிஜம்

கள்ளம் இல்லா உரை
கவர்ந்திடும் மனதை,
பித்தலாட்டம் பந்தா
மனிதனை
அரை மனிதனாக்குகிறது .
இன்றய கண்ணோட்டம்
ஏற்றத தாழ்வில்
மனிதனின் மனிதம்
மறைந்தே கிடக்கிறது ,
உண்மை எது/ பொய் எது/
புரியாத புதிர்தான் ,
ஆனாலும் நம்பிக்கை
நம்மை ஆட்கொள்ளும் போது
உள்ளம் ஒளியில் மின்னுகிறது.
.உண்மை புரிகின்றது, .
.உதட்டளவில் உரைப்பதல்ல
உண்மை,
செயலின் வரைவுதான் நிஜம் ,
ஊழல், லஞ்சம், பொறாமை
ஒருவனை ஈனப்பிறவியாக்குகிறது
தனிமைப் படுத்துகிறது,
ஒவ்வொரு மனிதனும் உலகில்
உன்னதப் பிறவிகளே ....
பதவி பட்டம் கூடவே வருவதில்லை ,கொண்டு வருபவர் எவருமில்லை

எழுதியவர் : பாத்திமாமலர் (9-Mar-21, 11:03 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 157

மேலே