வெங்காய வேதமோ

ஒவ்வொரு இதழாய்
உரித்தேன் இறுதியில்
ஒன்றுமின்மையே முற்றும்
உறுதியாகும்வரை.

மானுட அஸ்தித்துவ
முடிவை உணர்த்தியே
கடைசிவரைக் கொஞ்சம்
கண்ணீரும் வடிக்க வைத்ததோ...???

எழுதியவர் : அமல்.சி.தேவ் (12-Mar-21, 7:37 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 121

மேலே