கடவுளைத் தேடி

ஆசைகள் ஆட்டிவைக்க,
அவமானங்கள் அலங்கரிக்க,
துன்பங்கள் உள் செல்ல,
துயரங்கள் நெஞ்சடைக்க,
முட்டிமோதி விழும் பொழுது எட்டிப்பார்க்கும் ஞாபகம் கடவுள்..!

நானும் பட்டு துடிக்கும் பொழுது நாலாபக்கமும் தேடி
அலைந்தேன் கடவுளை...

ஒருவன் சொன்னான்
மலைஉச்சி ஏறி பார்
அவர் காட்சி தருவார்
துயர் துடைப்பார் என்று...

அலைகடல் போல்- மக்கள்
தலை கடல் மத்தியில்
சிக்கி திண்டாடி
சில நொடிகள் கூட
அவனை காண இயலாமல் சென்றேன் என்ற திருப்தியில்
திரும்பி வந்தும்
போகவில்லை துயரம்....

கன்னத்தில் கை வைத்து
கவலையுடன் திண்ணையில் இருக்கையில்
ஒருவன் சொன்னான் ...
கடலோரம் எழுந்திருக்கும்
ஒப்பற்ற கடவுள் அவனைப் பார்
உன் குறை தீர்க்கஅவன் துணையின்றி வேறொன்றும் இங்கில்லை என்று....

ஓடிச் சென்று
கடலில் மூழ்கி எழுந்து
ஈரத்துணியுடன்
பக்தி நடுக்கத்தில்
பரவசமாய் அவனடி தொழுது வீடுவந்தேன்
சோதனைகள் அது
சிறிதும் மாறவே இல்லை...

என்ன கொடுமையடா
என விரக்தியில் வீதியில்
செல்லும் போது
ஒருவன் சொன்னான் ....
மலையாள தேசத்தின்
மகிமையாய் ஒருவன் இருக்கிறான் ஒரு மண்டலம் விரதம் இருந்து அவனை சரணடை
துன்பம் தூசியாய் பறக்கும் என்று...

நம்பிக்கையை நெஞ்சில் ஏற்றி இருமுடியை தலையில் ஏற்றி
கூட்ட நெரிசலில்
சிக்கி ..திண்டாடி ..திணறி ..
அவனை தொழுது திரும்பினேன்
திருப்பங்கள் பிறக்கும் என்ற நம்பிக்கையில் ஆனால்
திரும்ப வந்தது புதிய சிரமங்கள்..

தேடி அலைந்தேன் கடவுளை
மலையேறியும்...
கடல் தாண்டியும்...
நதி கடந்தும்...
ஓடியும்... அலைந்தும் ...,
விரயங்கள் ஆனதே தவிர
துயரங்கள் அது விலகவே இல்லை..

ஓர் நாள் ஆழ்ந்த உறக்கத்தில் திடீரென ஒரு அசிரீரி
அடேய் முட்டாள்...
சிவனாகிய நான் ஜீவனாய்
உன்னுள் இருக்க
எங்கே தேடுகிறாய்
என்னை என்றுjQuery171033204082432866455_1640974455308

வியந்து கேட்டேன்
எல்லோருக்குள்ளும் நீ இருக்க
வாழ்வின் துன்பம் போக்க
சக்தி எங்களுக்கு இல்லையே ஏன்jQuery171054691779612415_1640985121018 துன்பத்தில் நாங்கள் புரளுவது ஏன்jQuery171013300188728755002_1640997734201 கூக்குரலிட்டு எங்கள் கஷ்டங்களை சொல்லியும்
கூப்பிட்ட குரலுக்கு உள்ளிருந்து கொண்டே வராதது ஏன்??

ஏன் ஏன் என என் கேள்விகளை
அடுக்கிக் கொண்டே போனேன்..

மீண்டும் அந்த அசரீரி சொன்னது உன்னுள் நான் இருக்க
ஏன் கூக்குரல் எழுப்ப வேண்டும்?? மௌனத்தை விட என்னுடன் பேச
சிறந்த பாஷை வேறுண்டோ??

உன்னுள் இருக்கும்
என் சக்தியை உணர நீ கடக்க வேண்டும் இன்னும் உள்ளே....
நீ கடக்க வேண்டியவை பல இருக்க கடவுள் எவ்வாறு வருவார் வெளியே.??

அசிரீரி பட்டியலிட்டது
உன் ஆசையைக் கட ..
உன் காமத்தை கட ..
உன் கோபத்தை கட..
உன் பாவத்தை கட..
உன் பாசத்தை கட..
உன் உறவை கட ..
உன் உணர்வை கட..
உன் எண்ணத்தை கட..
உன் வார்த்தையை கட..

இவைகள் எல்லாம் கடக்க..
உனக்கு புரியும்
வாழ்க்கை என்பது
வெறும் மாயை என...

அதை இருக்கமாக இதயத்தில் நிறுத்தி
உள்கட உள்கட உள்கட
அன்று பிறக்கும்
உன் ஜீவனுள் இருக்கும்
சிவனின் சக்தி..,
அது
புரியாத வரை
புறம் தேடி அலைந்தும்
புலம்பி திரிந்தும்
புலப்படாது கடவுள்

என சொல்லி மறைந்தது அசிரீரி,

விழித்துக் கொண்டேன் ....

என்றும் என்றென்றும்...
ஜீவன்...

எழுதியவர் : ஜீவன் (18-Mar-21, 3:00 am)
பார்வை : 302

மேலே