பூந்தோட்டம்

பூந்தோட்டம் ....!!

தாவரங்கள் தவழ்ந்து
விளையாடும் இடம்

புத்தம் புது மலர்கள்
பூத்துக்குலுங்கும் இடம்

வண்டினமும்
வண்ணத்துப்பூச்சிகளும்
மலருக்கு மலர் தாவி
ஓடிப்பிடித்து
விளையாடும் இடம்

பறவைகள் கூடுகட்டி
பாடி மகிழும் இடம்

காதலர்கள் காதல் சிறகை
விரித்து மகிழும் இடம்

கவிஞர்களுக்கு கற்பனை
ஊற்று பிறக்கும் இடம்

மனிதர்கள் தங்கள்
கவலைகளை மறந்து
பொழுது போக்கும் இடம்

குழந்தைகள் கும்மாளமடித்து
ஓடி விளையாடும் இடம்

மொத்தத்தில்
பூந்தோட்டம் ...
புதுமைகள் நிறைந்த
ஓர் சரணாலயம் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Mar-21, 6:49 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : poonthottam
பார்வை : 257

மேலே