மழை

எது மழை?
அகத்தை நனைப்பதா
புறத்தை நனைப்பதா...
அகத்தையும் புறத்தையும்
நனைப்பதா...
இல்லையெனில்...
தன்னை விடுத்து
அனைத்தையும்
நனைப்பதா...!
அன்றி...
தன்னையும் பிறதையும்
நனைப்பதா...!
இல்லை...
தானும் பிறதும்
நனைவதா...?

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (21-Mar-21, 8:12 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 177

மேலே