கன்னக் கதிப்பினில் செவ்வான ஓவியம்

தென்றல் குளுமையில் தேன்மலர் கள்விரியும்
புன்னகையில் முத்துக்கள் பூத்திடும் -- என்னன்பே
கன்னக் கதிப்பினில் செவ்வான ஓவியம்
என்மனம்எங் கும்வான வில் .

---நேரிசை வெண்பா
இலக்கிய இலக்கணப் பிரிய டாக்டர் வி கே கன்னியப்பன்
சொன்ன கருத்திற்கு நான் பதிந்த என் முந்திய கவிதையின்
வெண்பா வடிவம்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Mar-21, 10:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 99

மேலே