கண்ணெதிரே தோன்றி வா
முக்கனியின் சுவையே
முழுமதியின் ஒளியே
முத்தமிழின் உறவே
தத்தையின் தமிழே
தளிர் இளங்கொடியே
பளீர் வெளிர் பளிங்கே
களி பனித்துளியே
நெளி கூந்தல் நிலவே
கனவில் கூட
கண்ணீரெதிரே தோன்றி
நொடிப்பொழுதில் மறைந்தாயே
பொடிப்பொடியாக நொறுக்கிச்சென்றாயே
என்னெதிரே இருக்க
கண்ணெதிரே நீ வசிக்க
பெண்ணே ! என்னில் கண்டாய்
என்ன குறை ?
ஓர விழிப்பார்வையிலே
ஈரம் சிந்தும் பாவையே
நாதம் வழியும் தேனே
தூரம் போவதேனோ ?
உடைந்த அப்பளமாய்
உருக்குலைந்து போகிறதே
உன்னை காணாத வேளையில்
தாங்காத என் நெஞ்சம்
இனியும் பொறுத்திடேன்
இதயம் வெறுத்திடேன்
உதயம் உன்மனதில் வர
நிதமும் தவக்கிடக்கிறேன் ...
நன்றி !