கடாரம் கொண்டான்💥

கடாரம் கொண்டான்💥

உலகில் உள்ள அனைத்து
பேரரசர்களை கதிகலங்க செய்த
மாபெரும் மாமன்னன்.
இந்திய பெருங்கடலின் மிக பெரிய
பேரரசன்.
தெற்கு ஆசியாவை தன்வசம்
வைத்திருந்து சுத்தமான வீரன்.
வாள் அவன் முதல் மனைவி.
வில்லும் அம்பும் அவன் இரண்டாம்
மனைவிகள்.
கடல் தாண்டி போர் செய்து
பல வெற்றி குவித்த மகாசக்தி பொருந்திய மன்னர் மன்னன்.
இருபது வருட காலம் போர் களத்திலேயே
வாழ்க்கையை தொலைத்த மாபெரும் சோழ வம்சத்து சக்கரவர்த்தி.
வடதிசையில் உள்ள பெரும் பகுதிகளை தன் காலடிக்கு கிழ் கொண்டு வந்த வீரமிக்க வீராதி வீரன்.
கிழ் திசை நாடுகளை கபலீகரம் செய்ய
ஆயத்தமாகிறான்
உலகம் அதுவரை காணாத கடற்படையை உருவாக்கி கிழ்திசை நாடான கடாரம் நோக்கி
படைகளுடன் வங்க கடலில் பயணித்தான்
அந்த புஜபல பராக்கிரமசாலி.
பல்லாயிர கணக்கான மரக்கலங்கள் வங்க கடலில் சீறி பாய்ந்தன.
பகலில் சூரிய வெளிச்சத்திலும்
இரவில் நிலவின் ஒளியிலும்
வீரமாக பயணித்தான் தன் வீரமிக்க  படை வீரர்களுடன்.
கடாரத்தை வெற்றி கொண்ட அந்த மாமன்னன்
அதன் பக்கத்து நாடுகளையும் சூரையாடினான்.
கடாரத்தை வெற்றி கொண்டதால்
இராஜேந்திர சோழன்
கடாரம் கொண்டான் ஆகிறான்
சோழநாட்டு தலைநகரை தஞ்சையில் இருந்து ஜெயம் கொண்டம் அருகே
கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரை உருவாக்கினான் .
சோழர் ஆட்சி காலத்தில் தோல்வியே காணாத ஒரே ஒரு மாமன்னன்
இராஜேந்திர சோழன் என்றால் அது மிகை ஆகாது.

- பாலு.

எழுதியவர் : பாலு (26-Mar-21, 9:04 pm)
சேர்த்தது : balu
பார்வை : 39

மேலே