அலுவலக நாட்கள்

அவசரமாய் காலை கடனுக்கு கொஞ்சமாய் கடமைக்கு கொஞ்சமாய் நேரத்தை ஒதுக்கி அறைகுறை உணவுடன் கடமையே கதியென ஓடிய நாட்கள்.....
கொடுக்குற சம்பளத்துக்கு வேலை செய்தால் போதும் என்ற வார்த்தை களை என்றுமே கேட்காமல் கடந்த நாட்களேயில்லை...
இவளின் தேடல் வேறு எவரும் அறிந்திலர்....
இவளின் தேடலுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் என்றும் புதிய அனுபவங்களை அல்லி கொடுத்துக் கொண்டிருந்தது இவளது வேலை...
இவளின் பார்வை கூட எவருக்கும் வளைந்து கொடுத்ததில்லை அதனாலேனோ கண்டு ஒதுங்கியவர்களும் இங்குண்டு....
பாராட்டுகளுக்கு ஏங்கியதுமில்லை, எதிர்பார்த்ததுமில்லை...எனினும்
சிலபல மெனகெடலுக்கு பின் இனிதே முடித்த சாகச வேலைகளுக்கெல்லாம் தான்தான் முடித்ததாய் முந்திக்கொண்டு பெயர் வாங்கிகொண்ட பேர்வழிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் தான் இருந்தது...
அனுபவம் என்பது வருடத்தில் இல்லை அறிவில் உள்ளதென்பதை அறிவதில் சிலர் இங்கே விரும்புவதில்லை..
தன்னை தேடி வருபவருக்கு தெளிந்த விளக்கமும், அளவான பேச்சுமே இவளின் அடையாளம்....இவளே யாம்...
தன்னை பற்றி தானே எழுதுவதாலே என்னவோ வார்த்தைகள் வரமறுத்து தற்கொலை செய்து கொண்டதோ...

எழுதியவர் : ப்ரியா (26-Mar-21, 10:32 pm)
சேர்த்தது : priya
Tanglish : aluvalaga nadkal
பார்வை : 56

மேலே