நண்பன்

இன்பத்தையே நுகர்ந்து இன்பமே உலகு
என்று இருந்து வந்தவன் இன்று
இன்பத்தில் அந்த இன்பத்தில் இன்பம்
காணாது கலங்கி கால் போன
போக்கில் போய்க்கொண்டிருந்தான் எங்கே
போகின்றாய் என்று யாரோ கேட்பதுபோல்
இருந்ததோ...தெரியவில்லை ...;என்னைப்
படைத்தவனைக் காண என்றான் நான்
கேட்டதுபோல் ..... 'கரை தெறிவிட்டான் இவன்
இனி கவலை வேண்டாம் எண்ணுள்மனது
சொன்னது'....... அவன் நண்பன் எனக்கு
நான் பெரிதே மகிழ்ந்திட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Mar-21, 9:33 pm)
Tanglish : nanban
பார்வை : 3025

மேலே