தோளோடு தோள்சேர்த்து நடப்பான்

தோளோடு தோள்சேர்த்து நண்பன் நடப்பான்
நிழலாய் உடன்வரு வான்

தோள்கொடுப் பான்உன் துயரைத் துடைப்பான்
துணைநிற்பான் உன்னுயிர்காப் பான்

நிழலாய்நிற் பான்உன் துயரினில் ஆறுதலாய்
நட்பினும் சாலவேறில் லை

----கவிப்பிரிய பாத்திமா மலரை நிழல் கவிதை தூண்டிய
நட்பு வரிகள் குறட்பா வடிவில் .

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-21, 6:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 90

மேலே