ஏமாற்று ஆட்டம் ஆடினாய் நீயும்
ஏப்ரல் திங்களின்
முதல் நாள் இன்று...
சின்னச் சின்ன
ஏமாற்று ஆட்டங்களை
செல்லமானவர்களிடையே
செய்யும் நாள்...
ஆம்...
நீயும் ஏமாற்று
ஆட்டம் ஆடினாய்...
இன்று முதல்
அனல் காற்று வீசும்
என்று சொன்ன
வேளையிலே...
மழை காற்று தந்து
வாசற்படி நனைத்து
மனங்களிலே
இன்பம் தந்து
செல்கிறாய்...
எங்களிடம் செல்லமாய்
உனது ஆட்டத்தை
நிகழ்த்திவிட்டு
மறைந்து போன
மாயம் ஏனோ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
