தேர்தலும் மக்களும்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

மக்களின் ஞானமும் முகிலில் மறைந்த இளமைக் கதிராம்
இக்கால மக்களும் அடிமையாய் இருப்பதை விரும்பும் கூட்டமே
செக்கும் மாடுமாய் இருக்கும் கூட்டமும் மாற்றத்தை ஏற்குமோ
கொக்கும் நிற்கும் குறியாய் அரசியல் வேந்தர்கள் யாவரும்

தேர்தல் நேரத்தில் எழுச்சியாய் அரசியல் தலைவர்கள் கூவுவதை
பார்வையாள ரெனமக்கள் பார்த்து திறனையும் அறிந்து தெளிந்து
நேர்க்கொண்ட அறிவால் கூவுவோர் கொள்கைகளை திறம்பட அறிந்து
கார்கால மழைபோல் பயனைத் தருவோர் கொள்கை ஏற்றே

வாக்கினை குறிப்பிட்ட குறியில் இட்டே நம்மனம் எற்போரை
ஆக்குவோம் நம்தொகுதி உறுப்பினர் என்றே அனுப்புவோம் மன்றத்துள்
நோக்கும் தொகுதி குறைகளை கலைக்கவே அவருக்கு இருப்போம்
காக்கும் கவசமாய் பக்கத்தில் என்றும் நாமும் துணையாய்

அவையின்றி ஆக்கிய சாசனம் உரிமைகள் கடமைகள் சட்டமும்
சுவைக்கெட பணமும் பொருளும் நகையும் நிறைவாய் கொடுக்கும்
எவையையும் உயர்வாய் எண்ணியே பெறமுயன்று போற்றுங் கூட்டமே
நவைக்கு உதவும் குறையறிவு உள்ள தமிழ்பேசும் கூட்டமே.
¬¬¬¬¬¬¬¬¬ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Apr-21, 9:55 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : therthalim makkalum
பார்வை : 31

மேலே