இறையாகி மறைகிறதோ
இறைவன் படைத்ததாய்
அறியப்படும் இயற்கை கூட
பஞ்ச பூதங்களால்
பாழ்பட்டு அழியுமென்றால்
இயற்கைக்கே
இந்த கதியென்றால்
இயற்கை படைத்த
உயிர்களெல்லாம்
எந்த மூலை?
கடலுக்குள்ளே எழும்
பூகம்பம் கூட
பூலோகத்தையே
புரட்டிபோட்டு
உயிர்களை பறிக்கும்போது
பூமியிலும்
பூகம்பம் போல்
ஒன்று தோன்றியுள்ளதோ!
அது கொரோனா என்ற பெயரில்
மனித உயிர்களை அழிக்கிறதோ!
எதைப்பற்றியும்
அரிதியிட்டு சொல்ல
இயலாததால் தான்—எல்லாமும்
இறையாகி மறைகிறதோ!