இலங்கையின் உதிர ஞாயிறு

சிவனும் யேசுவும்
புத்தரும் அல்லாவும்
அத்தனையும் ஒன்று தான்
அன்று நாம் கற்றது
அன்பு தான் மார்க்கம்
அன்பு தான் எல்லாம்
அப்படியே அறிந்ததும்
ஆத்மீகம் ஆறுதல்
வணங்குதல் மேன்மை
தியானம் சாந்தம்
தொழுதல் சுபீட்சம்
தொகுப்பாய் கொடுத்தது
எவ்வளவு நம்பிக்கை
இறைவன் மீது
அத்தனையும் அவனே என
வணங்கி வணங்கி
வணங்கியபடி
வையகம் சேர்ந்த கொடுமை
எதனை சார்ந்தது
மனிதர்கள் தானே பிரிவினர்
இறைவனை ஏன் பிரித்து
இப்படி.....
இரத்த வரலாறு எழுதுகிறார்கள்

எழுதியவர் : நிரோஷனி றமணன் (4-Apr-21, 3:53 am)
சேர்த்தது : நிரோஷனி றமணன்
பார்வை : 40

மேலே