என் கனவு சிலையே
என் இனியவளே
என் கனவில்
நித்தம் நித்தம் வந்து
என்னை சிலையாக்கி
போகும் நீ ...!!
நிஜத்தில் மட்டும்
வருவதற்கு
தயக்கம் என்ன
என் கனவு சிலையே ...!!
கனவின் கற்பனை
சுகங்களை
நிஜமாக்க ,,,!!
நான் கண் விழித்து
கனவுகள் கலைந்து
போகும் முன்பே
விரைந்து வா
என் பொற்சிலையே ...!!
--கோவை சுபா