கட்டாந்தரையில்

கையைத் தலைக்கு வைத்து கட்டாந்
தரையில் படுத்து விட்டால் மெய்யெனும்
பொய் உடலும் ஓய்வெடுக்கும்

செய்யும் வேலையால் நிறைவு செம்மையாய்
நம்மை பற்றுங்கால் அல்லும் பகலும்
ஆனந்தம் புகும் இதயத்தை

சொல்லும் எச்சொல்லும் வெல்லுஞ் சொல்லானால்
அச்சொல் ஞாலத்தில் நற்சொல் என்றே
எக்காலமும் போற்றும் சொல்லாகும்.

தாய்மொழி கற்றலை குறைக்கும் மாந்தர்
யாவரும் நாயதின் மலத்தினை ஒப்பவே
வாழ்ந்து மடிவார் என்பதுணர்

அறிவின் இருளை நீக்கும் கலையே
அறிவியல் என்னும் பெயரால் உலகில்
சொல்லப் படுவதை அறி.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (7-Apr-21, 7:19 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 40

மேலே