என் அன்புள்ள அக்கா

ஆயிரம் உறவுகள் வந்தாலும்
இவள் ஒருத்திக்கு
நிகராகுமா....

சின்னச்சின்னதாய் பாராட்டி
என்னைச்சிறகடிக்க
வைத்தவளும் இவளே...

நான் செய்யும்
குறும்புதனங்களை
பொறுத்துக்
கொள்ளும் தாயும் இவளே..

நான் செய்யும் தவறுகளை
எனக்கு உணர்த்தும்
நீதிதேவதையும் இவளே...

என்னை அழ
வைப்பதும் இவளே ....
சிறிது நேரத்தில் சிரிக்க
வைப்பதும் இவளே.....

ரகசியங்களை சேகரித்து
வைக்கும் சேமிப்புப்
பெட்டகமும் இவளே...

நான் துவளும் நேரத்தில்
எனக்கு தைரியம் தந்து
என்னை வெளிக்கொண்டு
வருபவளும் இவளே...

எத்தனை முறை இந்த பூமியில் பிறந்தாலும் உனக்கே தங்கையாய் பிறந்திட ஆசையடி...

எழுதியவர் : ~காயகீர்த்தி~ (8-Apr-21, 8:21 am)
சேர்த்தது : காயகீர்த்தி
பார்வை : 551

மேலே