இறைவன்

வானில் சுழன்றுகொண்டிருக்கும் சூரியன் சந்திரன்
இன்னும் காணமுடிய தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்
இவற்றை சார்ந்த எண்ணிலடங்கா கோள்கள்
இவை எல்லாம் பூரணங்கள் அல்ல !
இவை அத்தனையும் காலச்சூழலில் காலத்திற்கு
அடங்கி நடக்கும் அழியும் பொருட்கள்...!!!
ஆனால் இவற்றை படைத்து ரசித்து கொண்டிருப்பவன்
ஒருவன் அவனே பூரணன் அவனுக்கு அழிவில்லை
எல்லையில்லை இல்லாதவன் எங்கும் நிறைந்தவன்
யாரறிவார் அவனை.....அதனால் அவனே இறைவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (8-Apr-21, 9:01 pm)
Tanglish : iraivan
பார்வை : 118

மேலே