ஆலம் இலை அத்தி இலை

ஆலம் இலை அத்தி இலை
அழுத்தமான எறுக்கு இலை
அரசன் இலை பூவரசன் இலை
மெல்லிய கல்யாண முருக்கை இலை
முத்துக் கொட்டை இலை பாப்பாளி இலை
நட்சத்திர வடிவு காசினி இலை
முருங்கை இலை வாதநாராயணன் இலை
மணம் வீசும் கருவேப்பிலை
கற்பூரவள்ளி இலை துளசி இலை
மருந்தாகும் திருநீற்றுப்பச்சை இலை
முசுமுசுக்கை இலை தூதுவலை இலை
கண்ணைக் காக்கும் கோவை இலை
பிரண்டை மூக்கரட்டை இலை
பாம்பு நஞ்சை இறக்கும் தும்பை
வெட்டிவேர் அறுகம் வேர்
மணம் கமழும் புதினா என
உயிர் காக்கும் இவைகளை
யாவரும் மறுக்காமல் பயன்படுத்தினால்
சிறந்த முறையில் வாழலாம் உலகிலே.
-------நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Apr-21, 10:28 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 25

மேலே