தடுமாறும் தர்மங்கள்

ஓட்டுக்கு காசு
கிடைக்கவில்லை
காவல் நிலையம் முன்பு
மக்கள் போராட்டம்...!!

கலைந்து செல்ல
காவல்துறை
மக்களுக்கு அறிவுரை...!!

காசு கிடைக்கும் வரை
எங்கள் போராட்டம்
தொடரும்...!!

மக்களின் முடிவை கேட்டு
காவல் துறை அதிர்ச்சி...!!

கலியுகத்தில்
தடம் மாறும் நியாங்கள்
தடுமாறும் தர்மங்கள்..!!

என்ன செய்வது
என்று புரியாமல்
நிலை தடுமாறி
தவிக்கும்
ஜனநாயகத்தின்
காவலர்கள்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Apr-21, 7:55 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 147

மேலே