அவள் என் கல்லறை தேவதை 555

***அவள் என் கல்லறை தேவதை 555 ***


என்னுயிரே...


உன்னை நினைக்கும்
போது என் எதிரிலும்...

உறங்கும் போது
என் கனவிலும் வருகிறாய்...

நினைவிலும் கனவிலும்
நீ வந்தாலும்கூட...

என்னருகில்தான்
நீ இருக்கிறாய்...

உன்
நினைவிலும் கனவிலும்...

எங்கோ தொலைவில்
இருக்கிறேன் நான்...

உன்னால் எனக்குள்
உண்டான காதல் நோயை...

நீயே
வந்து குணப்படுத்திவிடு...

உன்னால் முடியாதோ
கல்லறை எழுப்பிவிடு...

உன்னை காணுமுன் உன்னால்
உண்டான காதல் நோய்...

என்னை முழுமையாக
கொன்றுவிடக்கூடாது...

பூமாலையா மலர்வளையம் என்னருகில்
நீ கொண்டுவரப்போவது...

சொல்லிவிடடி விரைந்து
காத்திருக்கிறாள்...

இன்னொருத்தி
என் கல்லறை தேவதை.....


***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (11-Apr-21, 9:32 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 297

மேலே