தினம் என் நெஞ்சம் கரைகிறது 555

***தினம் என் நெஞ்சம் கரைகிறது 555 ***


தென்றலே...


இரவையும் பகலையும் தினம்
சந்திக்கும் மாலைபொழுதே...

நானும் அவளை
சந்திக்க காத்திருக்கிறேன்...

என்னோடு கோபம் கொண்டு
சென்ற ஜோடிக்கிளி...

இன்னும் என்னை
காண வரவில்லை...

மலர்ந்தால் வாடி உதிர்ந்துவிடும்
பூக்களுக்கு மத்தியில்...

வாடியும் உதிராத
செங்காந்த மலரை போல...

மாதங்கள் பல கடந்தும் இன்னும்
அவளுக்காக காத்திருக்கிறேன்...

தினம்
என் நெஞ்சம் கரைகிறது...


நெஞ்சத்தில் இருக்கும் அவள்
என்றும் கறையப்போவதில்லை...

என்னைவிட்டு நீ மட்டும்
சந்தோசமாக சந்தித்துக்கொள்...

இரவையும் பகலையும்
தினம் தினம்...

செவ்வான
அந்தி பொழுதே.....


***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (14-Apr-21, 9:07 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 908

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே