உன் நினைவுகள் தினம் என்னை தாலாட்டும் 555
***உன் நினைவுகள் தினம் என்னை தாலாட்டும் 555 ***
என் சகியே...
நானும் நீயும் கைகோர்த்து
நடந்த சாலையோரங்களும்...
பார்வையாலே பரிமாறிக்கொண்டு
அமர்ந்திருந்த கோவில் மண்டபமும்...
என் நினைவுக்குள்...
உன் விரல்களால் என்
நெற்றியில் நீ இட்ட...
திருநீற்றின் மனம் இன்னும்
என் மனதுக்குள்...
இந்த கோடையிலும்
உன் நினைவுகள்...
தென்றலாக
எனக்கு தாலாட்டு பாடுதடி..
கடல்
உறங்கும் இரவில் கூட...
சில இரவுகள் என்
இதயம் உறங்குவதில்லை...
உன்னை நினைத்து...
மீண்டும் ஒருமுறை
உன்னை காணவேண்டும்...
உன் விழிகளில்
என்னை நான்.....
***முதல் பூ பெ.மணி.....***
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
