உன் நினைவுகள் மட்டும் சுமையாக 555

***உன் நினைவுகள் மட்டும் சுமையாக 555 ***


என்னுயிரே...


தினம் விடியும்
ஒவ்வொரு நாளும்...

எதிர்காலத்தை
நோக்கி பயணிக்க...

என் மனது மட்டும் ஏனோ
உன்னை நோக்கியே பயணிக்கிறது...

வீசும் காற்றின் வேகம் மாறலாம்
வற்றாத நதியும் வற்றலாம்...

என்னில் இருக்கும்
உன் நினைவு மட்டும்...

இன்னும் ஏனோ
எனக்குள் கூடிக்கொண்டே...

என் தனிமையில்
நீதான் ஆளுகிறாய்...

உன் நினைவே வருகிறது
துணையாக தனிமையில்...

கடந்த காலம் மீண்டும்
கிடைக்க போவதில்லை எனக்கு...

கடந்த கால நினைவுகள்
மட்டும் சுகமாக சுமையாக எனக்கு.....

***முதல் பூ .பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (20-Apr-21, 4:54 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1291

மேலே