நிறமான இரவுகள்

காற்றுக்குள் சுழலும்
ஒலித்துகள்களில்
காற்றினை சுழற்றும்
ஒளித்திரள்கள்...
சிறு சிறு
பட்டாம்பூச்சிகள்.

மௌனத்தின் விஷமெடுத்து
இரவை திரிக்கும் நான்.

இரவுக்குள் சாய்ந்தாடும்
அவள் நிழலின் நிழற்படம்.

காற்றை குடித்து என்
கனவை புசித்து
நத்தையாய் நகரும் உயிருக்குள்
நின்று தடுமாறும் நினைவில்
சாய்ந்தாடும் நிழற்படத்தின் நிழல்.

ஒலியில் மோதிய
ஒளியின் கண்கள் கண்டு
துணுக்குறும் இரவுக்குள்
விழிப்புறும் அச்சிறு
பட்டாம்பூச்சிகள்...

பட்டாம்பூச்சி சிறகசைப்பில்
ஒலியை சுழற்றும் வளி.

வளிக்குள் சுழலும்
ஒளியின் நிழலில் விரிந்த
அப்பகலில் அவள்...



=================××××××××××××=======

எழுதியவர் : ஸ்பரிசன் (12-Apr-21, 5:24 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 1252

மேலே